Easy Tutorial
For Competitive Exams
GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test Yourself Page: 2
56052.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. கட்டபொம்மன் 23 நாட்களில் 400 மைல் தூரம் பயணித்த கலெக்டரைச் சளைக்காமல் பின்தொடர்ந்து, செப்டம்பர் 19ஆம் நாள் திருநெல்வேலியை அடைந்தார்.
ii. கட்டபொம்மன் சரியாக நடந்துகொண்டதாகவும் இதன் மூலம் அவர் தன்னை அழிவிலிருந்து காத்துக்கொண்டதாகவும் ஜாக்சன் திருப்தியுடன் கூறினார்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

அவமதிப்பையும் மீறி, கட்டபொம்மன் 23 நாட்களில் 400 மைல் தூரம் பயணித்த கலெக்டரைச் சளைக்காமல் பின்தொடர்ந்து, செப்டம்பர் 19ஆம் நாள் இராமநாதபுரத்தை அடைந்தார். கலெக்டரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு அன்றே தரப்பட்டது. கட்டபொம்மன் சரியாக நடந்துகொண்டதாகவும் இதன் மூலம் அவர் தன்னை அழிவிலிருந்து காத்துக்கொண்டதாகவும் ஜாக்சன் திருப்தியுடன் கூறினார்.
56053.நெற்கட்டும் செவல் கோட்டை மீது திடீர் தாக்குதல் தொடுக்க யாருக்கு உத்தரவு வந்தது?
கர்னல் பெய்லி
கர்னல் ஃபுல்லர்ட்டன்
கர்னல் ப்ரெய்த்வெயிட்
கர்னல் ஹெரான்
Explanation:

ஹெரான் ஊர் திரும்பும் வழியில் நெற்கட்டும் செவல் கோட்டை மீது திடீர் தாக்குதல் தொடுக்க உத்தரவு வந்தது. அந்தப் பாளையத்தை ஆட்சி செய்த புலித்தேவர் மேற்குப் பாளையக்காரர்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றிருந்தார். பீரங்கி உள்ளிட்டவற்றின் பற்றாக்குறை, படைவீரர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டிய தேவை ஆகிய காரணங்களால் ஹெரானின் தாக்குதல் கைவிடப்பட்டது. அவரது படை மதுரைக்குத் திரும்பியது.
56054.அமெரிக்கச் சுதந்திரப்போருக்குப் பிறகு அமெரிக்காவுடன் நட்பு உடன்படிக்கை செய்துகொண்ட நாடு/கள்?
ஸ்பெயின்
பிரான்ஸ்
இத்தாலி
a) மற்றும் b)
Explanation:

இரண்டாம் மைசூர் போரும் (1780) ஹைதரும்: அமெரிக்கச் சுதந்திரப்போருக்குப் பிறகு பிரான்ஸ் அமெரிக்காவுடன் நட்பு உடன்படிக்கை (1778) செய்துகொண்டது. எனவே பிரிட்டன் பிரான்ஸுக்கு எதிரான போரை அறிவித்தது. இதைப் போலவே ஸ்பெயினும் அமெரிக்காவுடன் நட்பு உடன்படிக்கை மேற்கொண்டு, இங்கிலாந்துக்கு எதிராகப் போரில் (1779) இறங்கியபோது இங்கிலாந்து தனிமைப்பட்டது.
56055.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. இந்தியாவில் பிரெஞ்சுப்படையின் ஆதரவுடன் நிஜாம் அலியும் மராத்தியரும் கைகோத்துச் செயல்பட்ட போக்கு ஆங்கிலேயருக்கு நெருக்கடியை அதிகப்படுத்தியது.
ii. ஹைதர் அலி இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள கர்நாடகத்திற்குப் படையெடுத்தார்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

இந்தியாவில் பிரெஞ்சுப்படையின் ஆதரவுடன் நிஜாம் அலியும் மராத்தியரும் கைகோத்துச் செயல்பட்ட போக்கு ஆங்கிலேயருக்கு நெருக்கடியை அதிகப்படுத்தியது. ஹைதர் அலி இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள கர்நாடகத்திற்குப் படையெடுத்தார்.
56056.ஹெக்டர் மன்றோ தலைமையிலான படையுடன் சேர்ந்து செயல்பட வேண்டியவராக இருந்தவர் யார்?
கர்னல் பெய்லி
சர் அயர்கூட்
கர்னல் ப்ரெய்த்வெயிட்
கர்னல் ஹாப்
Explanation:

ஹெக்டர் மன்றோ தலைமையிலான படையுடன் சேர்ந்து செயல்பட வேண்டிய கர்னல் பெய்லி ஹைதரின் திடீர்த்தாக்குதலில் கடுமையாகக் காயமுற்றார். இது மன்றோவை சென்னை நோக்கிச் செல்ல வைத்தது. ஹைதர் ஆற்காட்டை க் கைப்பற்றினார் (1780).
56057.சென்னை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வந்தவாசிப் போரில் வெற்றிபெற்றவர் யார்?
கர்னல் பெய்லி
சர் அயர்கூட்
கர்னல் ப்ரெய்த்வெயிட்
கர்னல் ஹாப்
Explanation:

சென்னை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வந்தவாசிப் போரில் வெற்றிபெற்ற அயர்கூட் மதராஸைக் கடல்வழியே முற்றுகையிட வங்காளத்திலிருந்து அனுப்பப்பட்டார். ஹைதருக்கு எதிராக வெற்றியை ஈட்டிய கூட் புதுச்சேரியை நோக்கி நகர்ந்தார்.
56058.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. கர்னல் பெய்லி பரங்கிப்பேட்டையை (Porto Novo) அடைந்து, ஹைதருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் வெற்றி பெற்றார்.
ii. ஹைதர் அங்கு நடைபெற்ற மோதலில் ஆங்கிலேயரிடம் பிடிபடுவதிலிருந்து நூலிழையில் தப்பினார்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

ஹைதர் தஞ்சாவூர் அரசைத் தன் பிடிக்குள் கொண்டுவந்தார். கூட் பரங்கிப்பேட்டையை (Porto Novo) அடைந்து, ஹைதருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் வெற்றி பெற்றார். ஹைதர் அங்கு நடைபெற்ற மோதலில் ஆங்கிலேயரிடம் பிடிபடுவதிலிருந்து நூலிழையில் தப்பினார்.
56059.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. புலித்தேவரும் பிற பாளையக்காரர்களும் கூட்டாக, சிறப்பான திட்டமிடலுடன் காட்டிய எதிர்ப்பு ஆங்கிலேயரைத் திருநெல்வேலி விவகாரங்களில் நேரடியாகத் தலையிட வைத்தது.
ii. 1756இலிருந்து 1763 வரைக்கும், திருவிதாங்கூரிலிருந்து கிடைத்த சீரான ஆதரவுடன், புலித்தேவர் தலைமையிலான பாளையக்காரர்கள் ஆற்காடு நவாபுக்கு எதிரான கிளர்ச்சியில் நீடித்து நின்றார்கள்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

புலித்தேவரும் பிற பாளையக்காரர்களும் கூட்டாக, சிறப்பான திட்டமிடலுடன் காட்டிய எதிர்ப்பு ஆங்கிலேயரைத் திருநெல்வேலி விவகாரங்களில் நேரடியாகத் தலையிட வைத்தது. 1756இலிருந்து 1763 வரைக்கும், திருவிதாங்கூரிலிருந்து கிடைத்த சீரான ஆதரவுடன், புலித்தேவர் தலைமையிலான பாளையக்காரர்கள் ஆற்காடு நவாபுக்கு எதிரான கிளர்ச்சியில் நீடித்து நின்றார்கள்.
56060.ஹைதரின் மகன் திப்பு சுல்தானால் தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட ஆங்கில படைத்தளபதி?
கர்னல் பெய்லி
சர் அயர்கூட்
கர்னல் ப்ரெய்த்வெயிட்
கர்னல் ஹாப்
Explanation:

ஹைதரின் மகன் திப்பு சுல்தான் கர்னல் ப்ரெய்த்வெயிட்டை கும்பகோணம் அருகே தோற்கடித்துச் சிறைப்பிடித்தார். மைசூர் சுல்தானின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக ஜெனரல் மேத்யூஸ் மங்களூரை நோக்கி ஒரு படையெடுப்பை மேற்கொண்டார். இந்த நடவடிக்கை ஆங்கிலேயர் எதிர்பார்த்தபடி திப்பு சுல்தானைக் கர்நாடகத்தை விட்டு மேற்குக்கடற்கரையை நோக்கி நகர வைத்தது.
56061.அமெரிக்கச் சுதந்திரப் போரின் முடிவில் கையெழுத்தான உடன்படிக்கை எது?
பாரிஸ் உடன்படிக்கை
அய்லா சாப்பேல் உடன்படிக்கை
லண்டன் உடன்படிக்கை
நியூயார்க் உடன்படிக்கை
Explanation:

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹைதரின் மரணம் (1782), அமெரிக்கச் சுதந்திரப் போரின் முடிவில் கையெழுத்தான பாரிஸ் உடன்படிக்கை (1783), நீண்ட நாட்களுக்கு நீடித்த மங்களூர் முற்றுகை ஆகிய நிகழ்வுகள் திப்பு சுல்தானுக்கு எதிரான ஆங்கிலேயரின் நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்ப்பதாக இருந்தன.
56062.கரூரையும் திண்டுக்கல்லையும் கைப்பற்றிய ஆங்கிலப்படைத்தளபதி?
கர்னல் பெய்லி
கர்னல் ஃபுல்லர்ட்டன்
கர்னல் ப்ரெய்த்வெயிட்
கர்னல் லேங்
Explanation:

கர்னல் லேங் கரூரையும் திண்டுக்கல்லையும் கைப்பற்றினார். கர்னல் ஃபுல்லர்ட்டன் பாலக்காட்டையும் கோயம்புத்தூரையும் கைப்பற்றினார் . அடுத்ததாக ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அவர் முன்னேறி வந்தபோது திப்பு சுல்தான் சமாதானத்துக்கு விருப்பம் தெரிவித்து, முற்றுகையைத் தவிர்த்தார்.
56063.மூன்றாம் மைசூர் போர் நடைபெற்றபோது கவர்னர் ஜெனரல் ஆக இருந்தவர்?
வெல்லெஸ்லி
கர்சன்
கார்ன் வாலிஸ்
வில்லியம் பெண்டிக்
Explanation:

மூன்றாம் மைசூர் போர்: 1790-92 இடைப்பட்ட காலத்தில் கார்ன்வாலிஸ் கவர்னர் ஜெனரல் ஆகப் பொறுப்பேற்றார். அவர் திப்பு சுல்தானைப் பழிவாங்கும் விதத்தில் நடந்துகொண்டார். தெற்கில் இரு மிகப்பெரும் சக்திகளாக விளங்கிய ஹைதராபாத் நிஜாமும் மராத்தியரின் கூட்டமைப்பும் ஆங்கிலேயரின் கூட்டாளிகளாக இதில் செயல்பட்டார்கள்.
56064.முதல் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின் மராத்தியர் ஆங்கிலேயருடன் செய்துகொண்ட உடன்படிக்கை எது?
சால்செட் உடன்படிக்கை
பேசின் உடன்படிக்கை
சால்பை உடன்படிக்கை
சூரத் உடன்படிக்கை
Explanation:

திப்புவுடனான போருக்குத் தேவைப்பட்ட நிதியாதாரங்களையும் கூடவே தன் படைகளையும் ஹைதராபாத் நிஜாம் ஆங்கிலேயருக்கு வழங்கினார். 1782இல் முதல் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின் ஆங்கிலேயருடன் சால்பை உடன்படிக்கை செய்துகொண்ட மராத்தியர் ஆங்கிலேயரை ஆதரித்தார்கள். . நிஜாம், மராத்தியர் ஆகிய இரு தரப்பிலிருந்தும் கிடைத்த ஆதரவால் ஆங்கிலேயரின் கை ஓங்கியது.
56065.திப்புவின் தூதுக்குழுவை நட்புறவுடன் நடத்திய பிரெஞ்சு அரசர்?
பதினாறாம் லூயி
பதினைந்தாம் லூயி
பதினான்காம் லூயி
பதினேழாம் லூயி
Explanation:

திப்பு கான்ஸ்டாண்டிநோபிளுக்கும் 1787இல் பாரிஸுக்கும் தூதுக்குழுவை அனுப்பினார். ஆங்கிலேயருக்கு எதிராகத் தன்னை வலுப்படுத்திக்கொள்வதற்காகத் திப்பு இந்த இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டார். பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயி தூதுக்குழுவை நட்புறவுடன் நடத்தினாலும், திப்பு எதிர்பார்த்த ஆதரவு குறித்து வெற்று வாக்குறுதியையே அளித்தார்.
56066.லாலியின் மதராஸ் முற்றுகையின்போது யாருடைய பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது?
யூசுப்கான்
மாபூஸ்கான்
ஹெரான்
அயற்கூட
Explanation:

லாலியின் மதராஸ் முற்றுகை (1758-59) யின்போது யூசுப்கானின் பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது. அவர் நிர்வாகப்பொறுப்பில் இருந்தபோது மதுரையில் நெசவுத்தொழிலை ஊக்குவித்தார். மதுரை கோயில்களில் வழிபாடு நடத்துவதற்குக் குறிப்பிட்ட தொகையை வழங்கினார். மதகுருக்கள் வசமிருந்த கோயில் நிலங்களை மீட்டெடுத்தார். ஆங்கிலேயர் அவரை ஆற்காடு நவாபுக்கு பணிசெய்ய ஆணையிட்டதால், அவர் கிளர்ச்சியில் இறங்கினார்.
56067.கூற்று (கூ): 1790ல் மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போர் தொடங்கியது.
காரணம் (கா): பிரிட்டனுடன் நட்பு பாராட்டிய திருவிதாங்கூர் மீதான திப்புவின் தாக்குதலும் கொடுங்களூரைக் கைப்பற்றியதும் கம்பெனி அரசுடனான போருக்கான அறிவிப்பாகவே எடுத்துக்கொள்ளப்பட்டன.
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் தவறானவை
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Explanation:

பிரிட்டனுடன் நட்பு பாராட்டிய திருவிதாங்கூர் மீதான திப்புவின் தாக்குதலும் கொடுங்களூரைக் கைப்பற்றியதும் கம்பெனி அரசுடனான போருக்கான அறிவிப்பாகவே எடுத்துக்கொள்ளப்பட்டன. இவ்வாறு மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போர் தொடங்கியது.
56068.திப்புவின் தளபதி ஹுசைன் அலியைக் கள்ளிக்கோட்டையில் தோற்கடித்த ஆங்கிலப்படைத்தளபதி?
கர்னல் பெய்லி
கர்னல் ஃபுல்லர்ட்டன்
கர்னல் ப்ரெய்த்வெயிட்
கர்னல் ஹார்ட்லி
Explanation:

கர்னல் ஹார்ட்லி திப்புவின் தளபதி ஹுசைன் அலியைக் கள்ளிக்கோட்டையில் தோற்கடித்தார். இதற்குப் பதிலடியாகத் திப்பு திருவண்ணாமலையைக் கைப்பற்றினார். புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநரின் ஆதரவைப் பெறுவதற்குத் திப்பு எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை.
56069.ஸ்ரீரங்கப்பட்டணம் அருகே திப்பு தோற்கடித்த கவர்னர் ஜெனரல்?
வெல்லெஸ்லி
கர்சன்
கார்ன் வாலிஸ்
வில்லியம் பெண்டிக்
Explanation:

கவர்னர் ஜெனரலான காரன்வாலிஸ் தானே வேலூரிலிருந்து படையெடுத்து வந்து, பெங்களூரை அடைந்தார். வழியில் அவர் திப்புவை எதிர்கொள்ள நேர்ந்தது. ஸ்ரீரங்கப்பட்டணம் அருகே திப்பு தோற்கடிக்கப்பட்டார். படையெடுப்பின்போது தேவைப்படும் பொருட்களின் பற்றாக்குறையால் காரன்வாலில் பின்வாங்க வேண்டியிருந்தது.
56070.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின்படி, திப்பு அவருடைய ஆட்சிப்பகுதிகளில் பாதி இடங்களை ஆங்கிலேயருக்குக் கொடுக்க வேண்டும்.
ii. போர் இழப்பீடாக மூன்று கோடி ரூபாய் அளிக்க வேண்டும்
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின்படி, திப்பு அவருடைய ஆட்சிப்பகுதிகளில் பாதி இடங்களை ஆங்கிலேயருக்குக் கொடுக்க வேண்டும்; போர் இழப்பீடாக மூன்று கோடி ரூபாய் அளிக்க வேண்டும்; அவருடைய மகன்களில் இருவரைப் பிணைக்கைதிகளாக அனுப்பி வைக்க வேண்டும்.
56071.மிகத் தீவிரமாக ஒரு குறுகிய பரப்புக்குள் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட கோல் கிளர்ச்சியின் தலைவர்?
புத்த பகத்
பகத்கான்
பிர்சா
பிந்த்ராய் மன்கி
Explanation:

மிகத் தீவிரமாக ஒரு குறுகிய பரப்புக்குள் நடந்த சண்டையில் கோல் கிளர்ச்சியின் தலைவரான புத்த பகத் கொல்லப்பட்டார். துண்டிக்கப்பட்ட அவரது தலையை ஆட்சியாளர்களிடம் ஒப்படைப்பதற்காக அதிகாரிகள், இராணுவ வீரர்கள் ஆகியோரிடையே ஓராயிரம் ரூபாய் விநியோகிக்கப்பட்டது.
Share with Friends